NEWS UPDATE *** தமிழகம் வருகிறார் ராகுல் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பொன்னேரி, சோளிங்கர், துறையூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார் *** அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூரில் உள்ள படைக்கலன் தொழிற்சாலை தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

NEWS UPDATE

3/recent/ticker-posts

அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூரில் உள்ள படைக்கலன் தொழிற்சாலை தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

திருச்சிராப்பள்ளி, ஏப்,11,


மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை அன்று திருவெறும்பூரில் உள்ள படைக்கலன் தொழிற்சாலை தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



தொழிற்சாலை வாயிலில் திரண்டிருந்த தொழிலாளர்களிடையே பேசிய அவர், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை எடுத்துரைத்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்து, பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments