NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்

 




திருச்சிராப்பள்ளி, ஏப், 9,



மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார்.







இவர் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட துரைசாமிபுரம், காஜேபேட்டை ,கீழப்புதூர் , மல்லிகைபுரம் , அன்னைநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் வீதி வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி வாக்கு சேகரித்தார்.




இந்த பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன், சிஐடியு சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், சிடிஎம் பகுதிக்கழு உறுப்பினர்கள் ரவிக்குமார், ரெட்டமலை, இளையராஜா உள்பட

கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி துண்டு பிரசுரங்களை பொது மக்களுடைய கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments