NEWS UPDATE *** தமிழகம் வருகிறார் ராகுல் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பொன்னேரி, சோளிங்கர், துறையூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார் *** திருச்சி மேற்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி மேற்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு



திருச்சி ---- 10.04.26

திருச்சி மேற்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், கழக முதன்மை செயலாளர்,அமைச்சர் கே.என்.நேரு மேற்கு தொகுதிக்குட்பட்ட கோரிமேடு,புது தெரு, நாயக்கர் தெரு, புத்தடி மாரியம்மன் கோவில் தெரு, ஒண்டி கருப்பண்ணசாமி கோவில் பகுதி, கள்ளர் தெரு, சின்ன மிளகுபாறை, ராஜா காலனி, எஸ்பிஐ காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு தீவிர வாக்கு சேகரிபப்பில் ஈடுபட்டார்.






அப்போது பொதுமக்கள் வழி நெடுகிலும் திரண்டு வந்து மலர் தூவி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.பிரச்சாரத்தின் போது அமைச்சர் கே.என்.நேரு தமிழக அரசின் சாதனைகளையும், தொகுதிக்கு செய்யப்பட்டுள்ள திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, நமது பகுதியின் வளர்ச்சி தொடரவும், மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றி கிடைக்கவும் வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும் வெற்றியை தேடித்தர வேண்டும்என அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.





இந்த பிரச்சாரத்தின் போது மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments