NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் பருவகால பணியாளர்களின் 10 அம்ச கோரிக்கைகளாக முழக்கமிட்டு ஆர்பாட்டம்

NEWS UPDATE

3/recent/ticker-posts

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் பருவகால பணியாளர்களின் 10 அம்ச கோரிக்கைகளாக முழக்கமிட்டு ஆர்பாட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் பருவகால பணியாளர்களின் 10 அம்ச கோரிக்கைகளாக முழக்கமிட்டு ஆர்பாட்டம் செய்தனர்.




1. திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் 2014 முதல் 2023 வரை பணிநியமனம் பெற்றுள்ள பருவகால கொள்முதல் பணியாளர்களின் குடும்ப கழ்நிலையை கருத்திற்கொண்டு உடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.


2. நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தைப் போலவே பருவகால பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கிட வழிவகை செய்திட வேண்டும்.


3. ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்த மூட்டைகளை 48 மணிநேரத்திற்குள் கழக விதிப்படி இயக்கம் செய்திட வழிவகை செய்ய வேண்டும். அவ்வாறு காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் பொருள் குறைவின் காரணமாக  இயக்கம் செய்யாமல் நீண்ட நாட்களுக்கு இருப்பு வைத்து இயக்கம் செய்யும் ஏற்படும் இயக்க இழப்பு தொகையினை நிர்வாகமே ஏற்கவேண்டும்.


4.அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் Out Sourcing மூலமாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் (Dut Sourcing Labours) பணியமர்த்தம் செய்ய வேண்டும்.


5. கொள்முதல் நிலையம் தொடங்கிய நாள்முதல் முடியும் நாள்வரை கொள்முதல் தொடர்பான அனைத்து செலவினங்களை நிர்வாகமே ஏற்க வேண்டும். கொள்முதல் நிலையத்திற்கு தேவையான தளவாட பொருட்கள் மற்றும் கோணிப்பைகள், சணல் ஒப்பந்ததாரர்கள் மூலம் நிர்வாகமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு இயக்கம் செய்திட வேண்டும்.

6 உள்ளூர் அரசியல் மற்றும் விவசாய சங்கங்களின் தலையீடு இல்லாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும்.

7. அனைத்து பணியாளர்களுக்கும் ஒரு வருடத்தில் மூன்று முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே பணி வழங்கப்படுகிறது. மீதமுள்ள மாதங்களில் காலியாக உள்ள களப்பணியிடங்களில் பணியமர்த்தம் செய்யப்பட்டு, அதற்குண்டான ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

8. தற்போது பருவகால பணியாளர்களாக பெண் பணியாளர்களும் பணிபுரிந்து வரும் நிலையில், அனைத்து பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு, தங்கும் இடம், குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

- பணியாளர்களின் வசிப்பிடத்திற்கு ஏற்றவாறு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையத்திலேயே பணியமர்த்தப்பட வேண்டும்.

இந்திய உணவு கழகம் மற்றும் விழிப்பு பணி குழுவால் மூன்று முதல் ஐந்து வருடம் வரை ஈரப்பதம் மற்றும் ஏனைய காரணங்களால் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள

பட்டியல் எழுத்தர் மற்றும் உதவுபவர்களை கருப்பு பட்டியலில் இருந்து விடுவித்து மீண்டும்

பணி வாய்ப்பு வழங்கிடவேண்டும என்றும் ',

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், 

ஆர்ப்பாட்டம் நடந்தது.

Post a Comment

0 Comments