NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு – பேரவையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு!

NEWS UPDATE

3/recent/ticker-posts

நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு – பேரவையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு!

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய், நெல், கரும்புகளை அறுவடை செய்து விற்பனை செய்ய விவசாயிகள் தங்களது உடல் பொருள் ஆவி என அனைத்தையும் செலவிட்டு வருவதாக குறிப்பிட்டார்.






அரசின் நிதிநிலை சரி இல்லை என்றாலும், நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 289 ரூபாய் கூடுதலாக சேர்த்து 2,750 ரூபாயும், பொது ரக நெல்லுக்கு 159 ரூபாயும் உயர்த்தி 2,600 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

கரும்பு டன் ஒன்றுக்கு கூடுதலாக 709.50 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை சேர்த்து, குறைந்தபட்ச ஆதாரவிலை 4000 ரூபாயாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments