திருச்சிராப்பள்ளி,ஜூன்,2,
திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தினர் ஒருங்கிணைப்பில் அனைத்து மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செவ்வாய் அன்று திருச்சியில் நடந்தது.கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் மஞ்சுநாத் தலைமை தாங்கினார். செயலாளர் டோம்னிக்ராஜ் வரவேற்றார்.
துணைத் தலைவர் மகேஸ்வரன், பொருளாளர் தர்மர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் புதிய வாகனங்களின் கடுமையான விலையேற்றம், உதிரி பாகங்கள், இன்சூரன்ஸ் மற்றும் வரிஏற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
லைப் டேக்ஸ் என்ற நடைமுறையை ரத்து செய்து பழைய முறையே பின்பற்ற வேண்டும்.
ஒரு ஆண்டிற்கு ரூ 15,000 செலுத்தி வந்த நிலையில் லைப் டேக்ஸ்என்ற பெயரில் 15 வருடத்திற்கு சுமார் 2 லட்சத்து 90 ஆயிரம் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். அரசு வேலை, அரசு ஒப்பந்த வேலை மற்றும் காண்ட்ராக்ட் முறை எடுக்கும் நிறுவனங்கள் 80 சதவீதம் உள்ளூர் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
அந்த, அந்த மாவட்டத்தில் உள்ள கட்டுமான உபகரணங்கள்வாகனம் ஏற்றி செல்லும் போது டெலிவரி சலான்இ-வே பில், ஜிஎஸ்டி ஆகிய போன்ற ஆவணங்களில் இருந்து உள்ளூர் உரிமையாளர்களுக்கு குறைந்தது 30 கிலோமீட்டர் வரை விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து எர்த் மூவர்ஸ் வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான வாடகையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
பழைய கட்டிட கழிவுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ரசீது இல்லை என்று வாகனத்தின் மீது அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும்.
நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று வாங்கபட்ட வாகனத்தை ஒன்று அல்லது இரண்டு தவணை கட்ட தவறினால் வாகன உரிமையாளருக்கு முன்னறிவிப்பு கொடுக்காமல் அடியாட்களை வைத்து வழிப்பறி என்ற பெயரில் நிதி நிறுவனம் வாகன பறிமுதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராவல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
எர்த் மூவர்ஸ் வாகனங்களை பயன்படுத்தி இடங்களை சுத்தம் செய்யும் பொழுது ஏற்படும் சிக்கல்களுக்கு இட உரிமையாளரும் வாகனங்களை அழைத்துச் சென்றவருமே முழு பொறுப்பேற்க வேண்டும். வாகனங்களையோ ஆப்ரேட்டர் மற்றும் உரிமையாளர்களையோ எந்தவித சட்ட சிக்கல்களுக்கும் உட்படுத்தக் கூடாது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் துணை செயலாளர் கவுதம் கார்த்திக் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


.jpeg)
0 Comments