NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** திருச்சியில் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி 5 ஆண்டுகளுக்குப் பின் களம் இறங்கிய மகஇக

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சியில் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி 5 ஆண்டுகளுக்குப் பின் களம் இறங்கிய மகஇக

 

திருச்சி தென்னூர் சாலையில் தனியார் ஓட்டல் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி திருச்சி மாவட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் பொது நல அமைப்புகள் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.க.இ.க மாவட்ட செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

 

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் அதிமுக ஆட்சியில் இருந்தபோது டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்த மகஇக வினர் கடந்த ஐந்து வருடங்களாக திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி எந்த ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடவில்லை.

தற்போது மீண்டும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என ஐந்தாண்டுகளுக்கு பின் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments