NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அமமுக புறநகர் மாவட்ட செயலாளர் தொட்டியம் ராஜசேகர் வேட்பு மனு தாக்கல் செய்தார்

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அமமுக புறநகர் மாவட்ட செயலாளர் தொட்டியம் ராஜசேகர் வேட்பு மனு தாக்கல் செய்தார்

 அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக  திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அமமுக புறநகர் மாவட்ட செயலாளர் தொட்டியம் ராஜசேகர் வேட்பாளராக போட்டியிடுகிறார். 



இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவை  தாக்கல் செய்தார் முன்னதாக திருச்சி நீதிமன்றம் வளாகம் அருகே உள்ள புரட்சித் தலைவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர் ஜெ சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி  ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அமமுக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், அமமுக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் பாஜக மாவட்ட தலைவர் ஒண்டி முத்து  உள்ளிட்ட  மேற்கு தொகுதி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments