NEWS UPDATE *** தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணியாற்ற விரும்பியதால் அண்ணாமலை போட்டியிடவில்லை - மத்திய அமைச்சரும் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேட்டி *** லால்குடி தவெக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் உறவினர் வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்; வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கப்பட்டதா?

NEWS UPDATE

3/recent/ticker-posts

லால்குடி தவெக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் உறவினர் வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்; வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கப்பட்டதா?



லால்குடி தவெக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் உறவினர் வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்; வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கப்பட்டதா?





தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதேபோல், மாநிலம் முழுவதும் தேர்தல் தேதி அறிவித்த அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் உரிய ஆவணங்கள் இன்றி புழக்கத்தில் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரம் தேர்தல் பறக்கும்படைக்கு இருக்கின்றது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியதோடு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளவனூர் நீலமேகம் மற்றும் அவரது மகன் அரவிந்த் வீட்டில் பல லட்சம் ரூபாய் இருப்பதாக லால்குடி வட்டாட்சியரும், தேர்தல் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் அரவிந்த் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 10 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தேர்தல் அலுவலர் தமிழ்ச்செல்வன் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, வருமான வரித்துறையினர் சென்று அரவிந்த் வீட்டில் சோதனை செய்தபோது 50 லட்ச ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்தனர்.

மேலும், 50 லட்சம் ரூபாய் பணத்தை வைத்துள்ளீர்கள் இதற்கான ஆவணம் இருக்கிறதா என்பது குறித்து எல்லாம் வருமான வரித்துறையினர் கேட்டனர். முன்னுக்குப் பிறனாக பேசியதால் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வேட்பாளருக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு நேர்மையாக உங்கள் வாக்கை செலுத்துங்கள் என்று தெரிவித்த நிலையில் தமிழக வெற்றிக்கழக டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன் மைத்துனர் வீட்டில் 50 லட்ச ரூபாய் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லால்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக வேட்பாளர் கு. பா.கிருஷ்ணன் அதிமுகவில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்போது அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆற்றில் பணத்தை மூட்டையில் கட்டி கொட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments