NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** கோரிக்கை ஏற்காவிட்டால் காலவரையற்ற விற்பனை நிறுத்தம் - மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த வியாபாரிகள் அறிவிப்பு

NEWS UPDATE

3/recent/ticker-posts

கோரிக்கை ஏற்காவிட்டால் காலவரையற்ற விற்பனை நிறுத்தம் - மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த வியாபாரிகள் அறிவிப்பு



கோரிக்கை ஏற்காவிட்டால் காலவரையற்ற விற்பனை நிறுத்தம் : மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த வியாபாரிகள் அறிவிப்பு



மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கோவிந்தன், செயலாளர் தங்கவேல், பொருளாளர் ஜான் கென்னடி மற்றும் நிர்வாகிகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளித்தனர். அதில், கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களால் வளர்த்து கொடுக்கும் பண்ணைகளில் இருந்து கறிக்கோழி கொள்முதல் செய்து, மக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். உற்பத்தி நிறுவனங்கள் கடந்த 4ம்தேதி முதல், தீவனங்கள் போட்டு தான் தரமுடியும் என அறிவித்து இன்று வரை கோழிகளை ஏற்றி விடுகின்றனர். இதனால், ரூ.50 மதிப்புள்ள தீவனத்தை நாங்கள் ரூ.150 கறிக்கோழி விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டி உள்ளது. இந்த இழப்பு வாடிக்கையாளர் களை சென்றடைகிறது. மேலும், இறைச்சி மக்களுக்கு செல்லும்போது பாதுகாப்பற்றதாகவும், தரமற்றதாகவும் உள்ளது. 

இந்நடைமுறையால், போக்குவரத்தின் போது அதிக கழிவுகள் ஏற்படுவதோடு, வாகனங்கள், தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். கறிக்கோழிகள் அறுவை கூடங்களுக்கு எடுத்து செல்வதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் கொடுப்பது நிறுத்த வேண்டும் என்பது சர்வதேச நடைமுறை அதனை தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தி ஆணைகள் பிறப்பித்து செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இன்று வரை அது பின்பற்றப்பட வில்லை. பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுப்புறத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீவன கட்டுப்பாடின்றி கோழி ஏற்றும் நடைமுறையை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் பண்ணையாளர்களுக்கு துறைரீதியாக உத்தரவிட வேண்டும். இதை தடுக்காவிட்டால் வரும் 31ம்தேதி முதல் காலவரையற்ற விற்பனை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments