NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** தளபதியால் எங்கள் தலைவிதி மாறட்டும்! என்ற வாசகத்தோடு 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 50 சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் வாழ்த்துக்களையும், தங்களது கோரிக்கைகளையும் வைத்தனர்.

NEWS UPDATE

3/recent/ticker-posts

தளபதியால் எங்கள் தலைவிதி மாறட்டும்! என்ற வாசகத்தோடு 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 50 சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் வாழ்த்துக்களையும், தங்களது கோரிக்கைகளையும் வைத்தனர்.

 தளபதியால் எங்கள் தலைவிதி மாறட்டும்! என்ற வாசகத்தோடு 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மின்சாரத்துறை அமைச்சரான நிர்மல் குமார் உள்ளிட்ட தமிழகவெற்றிக்கழகத்தை 50 சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் வாழ்த்துக்களையும், தங்களது கோரிக்கைகளையும் வைத்தனர்.



இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன் அவர்கள் கூறுகையில்

013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கடந்த 13 ஆண்டுகளாக, இரண்டு கழக அரசுகளாலும் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு அல்லல் பட்டு வருகிறோம். மேலும் நாங்கள் கடந்த காலங்களில் 100 போராட்டங்களை முன்னெடுத்தோம் அதிலும் குறிப்பாக திருச்சியில் நாங்கள் கடந்தாண்டு நடத்திய போராட்டத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் நேரில் வந்து எங்களுக்கு ஆதரவளித்து பெருமகிழ்ச்சியை தந்தது. மேலும் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்று எங்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் பொறுப்பாளர்களாக இருந்து 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களப்பணியில் இறங்கி பணியாற்றினர் என்பதையும் இந்நேரத்தில் நினைவு கூர்கிறோம்.



எங்களது நீண்டகால கோரிக்கையான ஏற்கனவே 2013 மற்றும் 2017 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 2018ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட மீண்டும் மற்றொரு நியமனத்தேர்வு என்ற அரசாணை149 லிருந்து எங்களுக்கு விலக்களிக்கவேண்டும்.


தற்போது தமிழகத்தின் நிதிநிலை சரியில்லை என தமிழக முதல்வர். விஐய் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.



அந்த நிலையை நாங்கள் உணர்கிறோம். தமிழக அரசு நிதிநிலை சீராகும் வரை 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் எங்கள் சங்கத்தை சார்ந்த சுமார் 4000 ஆசிரியர்கள் முற்றிலும் வாழ்வாதாரம் இழந்து எந்தவித பணியும் இன்றி தவித்து வருகிறோம்.

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு 4000 ரூபாய் உதவித்தொகை வழங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தகுதி பெற்றும் முற்றிலும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் எங்களுக்கு உதவித்தொகை வேண்டாம். மாறுதலாக அரசு பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை தொகுப்பூதியத்தில் பணியமர்த்தி எங்கள் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டுகிறோம். மேற்குறிப்பிட்ட எங்களது கோரிக்கைகளை தமிழக முதல்வர் மாண்புமிகு அண்ணன் ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக தலையிட்டு எங்களது நீண்ட கால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்

Post a Comment

0 Comments