10வது ஆண்டாக கார் பேரணி: அசத்தியது 'ஆரா'.
ஆரா திருச்சியில் மகளிர் அமைப்பு சார்பில் 10வது பாஸ்ட்ராக் டிஎஸ்டி கார் பேரணி நேற்று நடந்தது.
காவேரி மருத்துவ மனை, ஸ்பீட் பை பிபிசி எல் உடன் இணைந்து நடத்தப்பட்ட கார் பேர ணியில் தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
சாம்பியன்ஸ் லீக், பன் வேகன், பிரிட்ஜ் பில்டர்ஸ், மெடிக்கல் மேவரிக்ஸ் என 4 பிரிவுகளில் நடந்த கார் பேரணியை மொராய்ஸ் சிட்டியில் கமிஷனர் போலீஸ் காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சாலை பாதுகாப்பு, சமூக ஈடுபாடு, துல்லிய ஓட்டம் அடிப்படையில் நடத்தப்பட்ட கார் பேரணி யில் வெற்றி பெற்றவர்க ளுக்கு டிஐஜி வருண்குமார் பரிசளித்து பேசுகையில், 'சமூக பங்கேற்பும், சாலை பாதுகாப்பும் ஒன்றாக இணைந்து நடத்தும் கார் பேரணியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டுகிறேன்' என்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆரா உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, மிதிலி, ராஜ லட்சுமி, ஸ்மிதா, சுபா, வித்யா, விரிந்தா ஆகியோர் செய்திருந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:
சாம்பியன்ஸ் லீக்: ஆனந்த், மீனாட்சி, நித்யா, நாகரா ஜன். பன்வேகம்: சாந்தனா கிருஷ்ணா, சுதாகர், ஹேம லதா. பிரிட்ஸ் பில்டர்ஸ்: பிரகாஷ், சரண்ராஜ், அருண் பிரசாத், லிவியா பாலிமர் ப்ராடக்ட்ஸ். மெடிக்கல் மேவரிக்ஸ்: டாக்டர்கள் கார்த்திகேயன்,திலகவதி, கவுரி (காவேரி மருத்துவ மனை).

.jpeg)
0 Comments