திருச்சி, 25 ஜன 2004 போர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் அங்கமான சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனை, ரோட்டரி கிளப் திருச்சி சோழாவுடன் இணைந்து இன்று திருச்சியில் இலவச மருத்துவ முகாமை நடத்தியது இந்த முகாமில் கல்லீரல், நுரையீரல், இதயம் மற்றும் எலும்பு மஜ்ஜை தொடர்பான நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டது மேலும் மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர்
இந்த மருத்துவ முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். இதில் சென்னை கிளெனீகல் மருத்துவமனையின் முத்த மருத்துவர்கள் கல்லீரல் துறை இயக்குனர் டாக்டர் ஜாய் வர்கீஸ், இதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிவச்சை இயக்குனர் டாக்டர் கோவினி பாலசுப்ரமணி புற்றுநோய் மற்றும் எலும்பு மஜ்ஜை சிகிச்சை நிபுணர் டாக்டர் பொன்னி சிவப்பிரகாசம், நுரையீரல் மாற்று சிகிச்சை நிபுணர் டாக்டர் சிந்துரா, கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் டாக்டர் கதிரேசன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர் மேலும், சென்னை க்ளெனீகலஸ் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து குணமடைந்த திருச்சியைச் சேர்ந்த நோயாளிகளையும் அமைச்சர் நேரில் சந்தித்து தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள வாசவி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், நிபுணர்களின் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆரம்பக்கட்ட நோய் கண்டறிதல் மூலம் பயனடைந்தனர் பல நேரங்களில் முற்றிய நிலையில் கண்டறியப்படும் நாள்பட்ட மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களால் பலர் அவதிப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு இந்த மருத்துவ முகாமை கிளெனீகல்ஸ் மருத்துவமனை நடத்தியது
இந்த முகாமில் கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் சுருக்கம் உள்ளிட்ட கல்லீரல் தொடர்பான நோய்கள், இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள், எலும்பு மஜ்ஜை மற்றும் ரத்தம் தொடர்பான நோய்கள் குறித்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

0 Comments