NEWS UPDATE *** தனித்தொகுதிகளில் கிறிஸ்தவர்கள் போட்டியிடுவதை எதிர்த்து அர்ஜுன் சம்பத் வழக்கு *** தமிழர் தேசம் கட்சியின் மூன்றாவது மாநில மாநாடு

NEWS UPDATE

3/recent/ticker-posts

தமிழர் தேசம் கட்சியின் மூன்றாவது மாநில மாநாடு

 

திருச்சி ஜன.26-

தமிழர் தேசம் கட்சியின் மூன்றாவது மாநில மாநாடு திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை ஆலம்பட்டி புதூரில் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான , நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதனால் மத்திய மண்டலம் குலுங்கியது.



இந்த மாநாட்டில் தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் கே. கே. செல்வகுமார் நிறைவு பேருரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

நாடாண்ட சமூகம் முத்தரையர் சமூகம். ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட  ராஜ வம்சம்.  ஆனால் இன்றைக்கு தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான முத்தரையர் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை.

இது குறித்து இங்கு இருக்கும் அமைப்புகள் எதுவும் பேசுவதில்லை. அப்படி பேசினால் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பகைத்து கொள்ளக்கூடும் என்ற பயம். இங்கு எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய இடத்தில் நாம் தான் இருக்கிறோம். 

வீர முத்தரையர் முன்னேற்ற சங்கமும் தமிழர் தேசம் கட்சியின் தம்பிகள் தான் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் எதிர்த்து களமாடுகிறார்கள்

எங்களால் மட்டும் தான் இந்த மக்களுக்கான அரசியலை கொடுக்க முடியும். முத்தரையர் மக்களுக்கு எது தேவை என்பது எங்களுக்கு தெரியும். பா.ஜனதா கட்சி மதிக்காததால் தான் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினோம். 

வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சி தொடர்ந்து முத்தரையர் சமூக மக்களின் பிரச்சனைக்காக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி களம் நின்று போராடுவதை பார்த்து  தான் தி.மு.க. தலைமை எங்களை கூப்பிட்டு ஒரு சீட்டு தருவதாக சொல்லி இருக்கிறார்கள். 

எங்கள் சமூக மக்களுக்காக பாஜக என்ன செய்தது? எங்கள் சமுதாய நலனுக்காக யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பேன். துறப்பேன். கூட்டணி மூலம் எங்கள் வியூகத்தை மாற்றி அமைத்திருக்கிறோம். ஆகவே போலிகளையும் புல்லுருவிகளையும் முத்தரையர் சமூக மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

0 Comments