NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** திருச்சி மலைக்கோட்டை அருகே தரைக்கடை வியாபாரிகளுக்கு உரிய இடம் வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் திடீரென வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி மலைக்கோட்டை அருகே தரைக்கடை வியாபாரிகளுக்கு உரிய இடம் வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் திடீரென வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


திருச்சி மலைக்கோட்டை பகுதியை சுற்றியுள்ள என் எஸ் பி சாலை, பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மலைக்கோட்டை அருகே உள்ள தெப்பக்குளம் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள தரைக்கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உத்தரவின் பேரில் அப்பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான கடைகள் அகற்றப்பட்டன.



 

என் எஸ் பி சாலையில் தரை கடை வைத்திருக்கக்கூடிய வியாபாரிகள் தங்களுக்கு யானைகட்டி மைதானத்தில் மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று திருச்சி மலைக்கோட்டை அருகே பெரிய கடை வீதி பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த தரைக்கடை வியாபாரிகள் 200 க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரி ஒருவர் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.( மற்ற வியாபாரிகள் அவரது தலையின் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார் )






 

தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. மேடம் திடீரென தரக்கடை வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .

Post a Comment

0 Comments