அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் தென் தமிழகத்தின் சார்பாக இரண்டாவது மாநில பொது குழுவானது திருச்சியில் உள்ள கோதைநாயகி திருமண மண்டபத்தில் சுதந்திர தின விழாவோடு சிறப்பாக நடைபெற்றது.
காலை 10 மணி அளவில் கொடி ஏற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் விக்டோரியா கௌரி அவர்கள் கலந்து கொண்டு இளம் வழக்கறிஞர்களுக்கு சட்டத்தைப் பற்றியும் சட்டத்தோடு இணைந்த தர்மத்தை பற்றியும், வழக்கறிஞர்கள் மட்டும் ஏன் கற்றறிந்த வழக்கறிஞர்கள் என அழைக்கப்படுகிறார்கள் என்பதற்கான தெளிவான விளக்கங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் வழக்கறிஞர்களுக்கு தொழில் செய்வதில் உள்ள இடையூறுகளை கலைவதை பற்றியும், பாதுகாப்பு குறைவினால் வழக்கறிஞர்கள் கட்சிக்காரர்களாலும், ஒரு சில நபர்களாலும் தாக்கப்படுவதற்கு எதிராக வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தினை மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கொண்டு வருவதற்கு சிறப்பு தீர்மானமானது இயற்றப்பட்டது.
அதேபோல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆள்வாரையை ஒரு லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்த சிறப்பு தீர்மானம் இயற்றப்பட்டது.
மேலும் பெண்களுக்கு என தனி Portfolio நீதியரசர் நியமிக்க தீர்மானம் இயற்றப்பட்டது.
மேலும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதி அரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராக ஓய்வு பெற்ற நீதி அரசர்கள் வைத்துள்ள விமர்சனங்களுக்கு எதிராக கண்டன தீர்மானமும் இயற்றப்பட்டது.
மேற்கண்ட நிகழ்வில் திருச்சி, மதுரை, தேனி திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேற்படி நிகழ்ச்சிக்கு இறுதியாக மாநில பொதுக்குழுவில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க தென் தமிழகத்தின் புதிய தலைவராக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் சரவணன் அவர்களும், பொதுச் செயலாளராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் திருD.கேசவன் அவர்களும் மற்றும் துணை தலைவர்கள், செயலாளர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொதுக்குழு மாலை 4 மணி அளவில் முடிவுற்றது

.jpeg)
.jpeg)

0 Comments