NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** இ-பைலிங் முறையை வாபஸ் பெற கோரி திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

NEWS UPDATE

3/recent/ticker-posts

இ-பைலிங் முறையை வாபஸ் பெற கோரி திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

 திருச்சி டிச.9-

தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.



இதற்குப் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என கூறி வழக்கறிஞர்கள் இ-பைலிங் முறையை வாபஸ் பெற கோரி கடந்த 1 - ந் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .

அந்த வகையில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நீதிமன்றம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



உண்ணாவிரத போராட்டத்திற்கு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பி.கணேசன் தலைமை தாங்கினார். திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் சி. முத்துமாரி முன்னிலை வகித்தார்.  இதில் துணைத் தலைவர் வடிவேல்சாமி , பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார் , இணைச்செயலாளர் விக்னேஷ் ,பொருளாளர் சதீஷ்குமார்,  நகர வழக்கறிஞர் சங்க பொருளாளர் சுதர்சன், முன்னாள் துணைத் தலைவர் மதியழகன், முன்னாள் செயலாளர் சுகுமார்,மூத்த வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட், துணைத் தலைவர்கள் வரகனேரி சசிகுமார், பிரபு, பொருளாளர் கிஷோர் குமார்,முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன்,வழக்கறிஞர்கள் சரவணன், ஏ. ராஜேந்திரன் , பெரியசாமி, ஜெகதீசன் சந்திரசேகரன் , சிற்றரசு, கண்ணன், ஐ.செல்வராஜ், சுகன்யா, வனஜா, கவுசல்யா, வழக்கறிஞர் நியூமேன், ஆர்.ஏ.அஸ்வின் ராஜா, கரண்ராஜ், தீபன், கோபி,மற்றும் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments