மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்கள் துவக்கி வைத்து அனைத்து நீதிமன்றங்களிலும் சமரச தீர்வு காணப்பட்டு மொத்தமாக 28 கோடியே 58 லட்சத்தி 69 ஆயிரம் 630 ரூபாய் உடனடி தீர்வு காணப்பட்டு இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டது மதியம் மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதிகள் P. T. ஆஷா, மாண்புமிகு T. தண்டபாணி, மாண்புமிகு செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகபட்சமான இழப்பீடு தொகையான ஒரு கோடியே 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி பலருக்கு நிரந்தர தீர்வும் வழங்கினார்கள்.
மேலும் தற்போது திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் நடந்து வரும் கட்டிட பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று மாண்புமிகு மாவட்ட நீதிபதி திரு M. கிறிஸ்டோபர் மற்றும் பொறியாளர்களிடம் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகள் P. T. ஆஷா மற்றும் T. தண்டபாணி அவர்கள் கேட்டறிந்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி N. S. மீனா சந்திரா, மாண்புமிகு நீதிபதிகள் சுவாமிநாதன், முத்துக்குமரன், கார்த்திகா, இலவச சட்டப் பணிகள் ஆணை குழு நீதிபதி பிரபு மற்றும் சார்பு நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள்,அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் அரசு வழக்கறிஞர்கள் சவரிமுத்து, மோகன் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத் தலைவர் S. P. கணேசன், செயலாளர் C.முத்துமாரி, துணைத் தலைவர் வடிவேல் சாமி, இணை செயலாளர் விக்னேஷ், பொருளாளர் சதீஷ்குமார்,குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் ஆகியோர் உடன் இருந்தனர் .

.jpeg)
.jpeg)

0 Comments