திமுகவில் அமைச்சர் பொன்முடியின் சர்ச்சையான பேச்சுகளாலும், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளாலும், கடந்த வாரம் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.
அதில், பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், செந்தில் பாலாஜி வகித்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மனோ தங்கராஜ் மீண்டும் பால்வளத்துறை அமைச்சரானார்.
இத்தகைய சூழலில் தமிழக அமைச்சரவையில் இன்று மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனிடமிருந்த கனிமவளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே போல, அமைச்சர் ரகுபதி வசமிருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 Comments