NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** திருச்சி எம் ஐ இ டி கல்லூரியில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தமிழக முதல்வர் பங்கேற்பு.

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி எம் ஐ இ டி கல்லூரியில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தமிழக முதல்வர் பங்கேற்பு.

 


திருச்சி எம். ஐ .இ. டி .பொறியியல் கல்லூரியில் மே 9,10 ,11 ஆகிய நாட்களில் இஸ்லாமிய இலக்கியக் கழக உலக ஒன்பதாம் மாநாடு நடைபெறுகிறது



இம்மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் மற்றும் தமிழக அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி. செழியன், சா.மு. நாசர், மு.பெ. சாமிநாதன் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்

மேலும் இஸ்லாமிய இலக்கிய கழக பொன்விழா நிறைவையோட்டி நடைபெறும் இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், அருட்தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ், தவத்திரு திருவடிக்குடில் சாமிகள், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா உட்பட ஏராளமான அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்

இந்த மாநாட்டில் மலர் வெளியீடு, நூல்கள் வெளியீடு, ஆய்வரங்கம், கருத்தரங்கம், உரையரங்கம், வாழ்த்து அரங்கம், மார்க்க அறிஞர் அரங்கம், மகளிர் அரங்கம், கவியரங்கம், தீனிசை அரங்கம், விருது வழங்கல் ஆகிய நிகழ்ச்சிகளும்  இடம்பெற்று நடைபெறுகின்றன.மாநாட்டில்

பல்வேறு நாடுகளில் இருந்து அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள்,  கலந்து கொண்டும் சிறப்பிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் இந்த இஸ்லாமிய இலக்கிய தமிழ் மாநாட்டையோட்டி எம்ஐஇடி கல்லூரி வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று நாள் மாநாடு வெற்றிகரமாக நடைபெறும் என்று அகில இந்திய முஸ்லிம் லீக்  தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments