NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் !

NEWS UPDATE

3/recent/ticker-posts

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் !

 

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி ஆர் சி  மேல்நிலைப் பள்ளியில் மாநிலத் தலைவர் அன்பரசன் அவர்கள் தலைமையில் 3 5 2025 இன்று நடைபெற்றது.



 இக்கூட்டத்தில் தென்காசி மாவட்ட தலைவர் பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து  இயக்க செயல்பாடுகள் பற்றியும் மாநிலப் பொருளாளர் இளங்கோ நிதியும் பொது நிகழ்வு பற்றியும் மாநில அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன் நன்றி உரையும் நிகழ்த்தினார் . 

மாநில பொதுக்குழு கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

 சரண் விடுப்பு ஊதியம் உள்ளிட்ட ஒன்பது சலுகைகளை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.. 

பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை 31 5 2025 குள் நடத்தப்பட வேண்டும் என்றும் பணி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களிலிருந்து பணி மாறுதல் மூலம் பணிபுரிகிற உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் 1.1.2016 தேதிக்குப் பிறகு பணிபுரிகிற உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த மூன்று ஊதிய குழுக்களில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாததால் ரூபாய் 500 ரூபாய் 29 மற்றும் 2000 என தனி ஊதியமாக வழங்கப்பட்டது தற்போது வழங்கப்பட்டு வரும் தனி ஊதியம் ரூபாய் 2000திற்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என்றும் தனி ஊதியம் ரூபாய் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலைப்பதவியிலும் தொடர்ந்து பெற அரசாணை 33 திருத்தம் செய்து ஆணை வழங்கப்பட வேண்டும் என்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை சிபிஎஸ் என்ற முறையில் ரத்து செய்து பழைய ஓய்வு ஊதிய திட்டத்தினை ளைஜிபிஎப் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மாவட்ட  கல்வி அலுவலர் பதவி உயர்வு மற்றும் பணி நிறைவு பெறுவதால் ஏற்படும் காலிப் பணியிடத்தில் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் மூத்த உயர்நிலை அல்லது மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களை மட்டுமே பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

Post a Comment

0 Comments