தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் திருச்சி தெற்கு மாவட்ட வர்த்தக அணி மற்றும் மகளிர் அணி சார்பாக மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி இன்று வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது.
இந்த விளையாட்டு போட்டியினை திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர் .
அமைச்சர் நேரு வருவதற்கு முன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு வந்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி சரவணன் அவர்களை அழைத்து கடிந்து கொண்டார் . என்னவென்று விசாரித்ததில் வெற்றிக்கோப்பையில் அமைச்சர் கே என் நேரு படம் தவிர்க்கப்பட்டிருந்தது .
இதனால் அமைச்சர் நேரு வருமுன் கோப்பைகள் திருப்பி வைக்கப்பட்டது.
.
பின்னர் தெற்கு மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியது நம்மை அதிர்ச்சிக்குள் ஆக்கியது.
அமைச்சர் கே.என். நேருவால் நமக்கு என்ன பிரயோஜனம் ? பேனர்களில் அவர் படம் வைத்ததே பெரிய விஷயம் இதில் கோப்பைகளில் அவர் படம் எதற்கு என வர்த்தக அணி திருச்சி தெற்கு மாவட்ட அமைப்பாளர் சரவணன் கூறி உள்ளார் .
இது எங்கள் அமைச்சர் நேருவை அழைத்து அசிங்கப்படுத்தி உள்ளனர் என்று கூறுகின்றனர் அமைச்சர் நேருவின் விசுவாசிகள்.
இந்த சரவணன் ஏற்கனவே தனது வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி மட்டும் அந்த மேடையை இடித்து மேயரிடம் கூறினாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது நான் தெற்கு மாவட்டத்தை சேர்ந்தவன் என என தெனாவட்டாக கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது .


0 Comments