திருச்சி ஹர்சமித்ரா புற்றுநோய் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மே மாதம் 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. புகையிலை எதிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டபோது புகையிலை பயன்படுத்துவதால் பொதிந்துள்ள ஆபத்துகளை வெளிப்புற கவர்ச்சியின் மூலம் மறைப்பதற்கான முயற்சிகளை பற்றிய தெளிவான பரப்புரை கருத்துகள் எடுத்துச் சொல்லப்பட்டது .
இந்த நிகழ்வில் திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் மாணவர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு சுருக்கமாகவும் தெளிவாகவும் உடனடியாகவும் பதில் அளித்தார் . விழாவில் சிறப்பான குறும்படங்களை தயாரித்து அனுப்பிய நபர்களுக்கும் மற்றும் படைப்பாளிகளுக்கும், விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார் . இந்நிகழ்வில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவுக்கு சிறப்பு செய்தனர். டாக்டர் அர்ச்சியா பேகம் கேஏபி விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வரும் ஆர் சி உதயகுமார் முனைவர் செந்தாமரை ரூபா ராஜசேகரன் மற்றும் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள் காணிக்கை பர்வீன் மேரி செர்வைட் செவிலியர் கல்லூரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் . முன்னதாக அர்ஷ மித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் புற்றுநோய் அறிவுரை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார் .
புற்றுநோய் கதிர் இயக்க சிகிச்சை நிபுணரும் செயல் இயக்குனருமான டாக்டர் பி சசி பிரியா நன்றி உரையாற்றினார் . இவ்விழா நாளை நாலு மணி முதல் 6:00 மணி வரை நடைபெற்றது . சமூக நலனுக்கான புகையிலை ஒலிக்கும் பங்களிப்பில் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு விழிப்புணர்வு பரப்பும் முயற்சியில் இணைந்து புகையிலை அற்ற நலம் நிரம்பிய சமுதாயத்தை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையை இந்த விழா ஏற்படுத்தியது . விழாவினை அரசமித்ரா மருத்துவமனையின் பணியாளர்கள் ஒருங்கிணைத்தனர் .

.jpeg)
.jpeg)

0 Comments