NEWS UPDATE *** அஜித் மரண வழக்கு.. திடீர் திருப்பம்.. குற்றப்பத்திரிகையில் DSP பெயர் - CBI அதிரடி *** எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் மாபெரும் அடையாள வேலை நிறுத்தம் நடத்த முடிவு !

NEWS UPDATE

3/recent/ticker-posts

எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் மாபெரும் அடையாள வேலை நிறுத்தம் நடத்த முடிவு !

திருச்சி பிரஸ்.கிளப்பில்   பத்திரிகையாளர்களுக்கு எர்த் மூவர்ஸ் உரிமையாளர்களின் நலச்சங்கதின் நிர்வாகிகள் பேட்டியளித்தனர்  



 எர்த் மூவர்ஸ் உரிமையாளர்களின் மாபெரும் அடையாள வேலை நிறுத்த தீர்மானங்கள் 

1: புதிய வாகனங்களின் கடுமையான விலை ஏற்றம் உதிரி பாகங்கள் மற்றும் இன்சூரன்ஸ் மற்றும் வரி ஏற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் .

2. வெளி மாநில மாவட்ட வாகனங்கள் நமது சங்கத்தின் நிர்ணயம் செய்த விலையை விட குறைவான கட்டணத்தில் இயக்குவதை அனுமதிக்க கூடாது .



3. அரசு வேலை மற்றும் அரசு ஒப்பந்த வேலை மற்றும் காண்ட்ராக்ட் முறையெடுக்கும் நிறுவனங்கள் எண்பது சதவீதம் உள்ளூர்  வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது  : 

4: நமது சங்கத்தின் ஸ்டிக்கர் இல்லாமலும் சங்கம் நிர்ணயித்த விலையை விட குறைவாக வெளி மாவட்ட வண்டிகள் இருக்கு அதை தடை விதிக்க வேண்டும் :

 5.:. கட்டிடம் இடிக்கப்படுகிற குப்பைகளை ஏற்றி செல்லும் போது பில் இல்லை என்று வாகனத்தின் மீது அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது : 

6. நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று வாங்கப்பட்ட வாகனத்தை ஒன்று அல்லது இரண்டு தவணை கட்ட தவறினால் வாகன உரிமையாளருக்கு முன்னறிவிப்பு கொடுக்காமல் அடியார்களை வைத்து நிதி நிறுவனம் வண்டிகளை வழிப்பறி செய்வது போல் பறிமுதல் செய்கிறது .

7. 10.04.2025 முதல் 14.04.2025 வரை திருச்சி.. கோயமுத்தூர் , திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட உரிமையாளர்கள் இணைந்து வாடகை உயர்வுக்காக வேலை நிறுத்தம் செய்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது .

எனவே அனைத்து கட்டுமான நிறுவனங்களும் கட்டுமான பொறியாளர்களும் அனைத்து சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவும் வாடகை உயர்வுக்கு ஒத்துழைப்பும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது . இந்த வேலை நிறுத்தத்தை திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் அழைப்பு விடுத்தது

இந்த வேலை நிறுத்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மஞ்சுநாத் மாவட்ட செயலாளர் டோமினிக் ராஜ் . மாவட்ட பொருளாளர் தர்மர் மற்றும்  புதிய ஜனநாயக அமைப்பு தோழர்கள் இந்த அடையாள  வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments