NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** தமிழக ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புள்ள தீர்ப்பை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் திருச்சியில் திமுகவினர் கொண்டாட்டம் !

NEWS UPDATE

3/recent/ticker-posts

தமிழக ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புள்ள தீர்ப்பை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் திருச்சியில் திமுகவினர் கொண்டாட்டம் !

தமிழக ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புள்ள தீர்ப்பை  பெற்றுள்ள முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும்  மகிழ்ச்சியோடு வரவேற்கும் விதமாகவும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்  வசந்தபவன் அருகில் தெற்கு மாவட்ட திமுகவினர் தெற்கு மாவட்ட  செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாநகரக்  செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.









இந்நிகழ்வில்  மாவட்டக்  நிர்வாகிகள் செங்குட்டுவன், மூக்கன்,  லீலாவேலு,  குணசேகரன், பகுதி  செயலாளர் மோகன்: கொட்டப்பட்டு தர்மராஜ்,  நீலமேகம், விஜயகுமார், ராஜ்முஹம்மது,  பாபு மணிவேல் மாநகர நிர்வாகிகள் நூற்கான்  பொன்செல்லையா  மற்றும் மாவட்ட மாநகர நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


கவர்னர் ஆர்.என். ரவி மசோதாக்களை நிறுத்தி வைத்தது தவறு - சுப்ரீம் கோர்ட்தமிழக அரசின் 10 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டப்படி தவறானது. பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்தது தவறு. கவர்னர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் கருத்து தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments