NEWS UPDATE *** தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணியாற்ற விரும்பியதால் அண்ணாமலை போட்டியிடவில்லை - மத்திய அமைச்சரும் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேட்டி *** திருச்சி பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா – மத்திய உள்துறை அமித்ஷா பங்கேற்பு!

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா – மத்திய உள்துறை அமித்ஷா பங்கேற்பு!

 நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒயிலாட்டம் ஆடியும், நாட்டுப்புற இசையமைத்தும் கலைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள பொங்கல் பானையில் பொங்கல் வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பு வழிபாடு நடத்தினார்.





முன்னதாக, திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல், எல்.முருகன் ஆகியோரும் உடனிருந்தனர். கோயிலுக்கு சென்றபோது, அங்கு திரண்டிருந்த மக்களுடன் அமித்ஷா கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

Post a Comment

0 Comments