NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** மக்களுக்காக போராடும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆ.நந்தினி மற்றும் தலைவர் ஆனந்தன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

NEWS UPDATE

3/recent/ticker-posts

மக்களுக்காக போராடும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆ.நந்தினி மற்றும் தலைவர் ஆனந்தன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

 18.11.2025 இடம். திருச்சி 

E.V.M மிஷினில் நடந்த எல்லா தேர்தல் களையும் செல்லாது என அறிவித்து ரத்து செய்யக் கோரியும்,,.... EVM மிஷினை தடை செய்து நாடு முழுவதும் வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்துவது குறித்தும் மக்களுக்கு மக்களுக்காக போராடும் கட்சிக்கு கட்சியின் தலைவர் ஆனந்தன் அவர்களும் ஒருங்கிணைப்பாளர் நந்தினி அவர்களும் EVM. மிஷினைப் பற்றி. விளக்கி கூறி பத்திரிகையாளர்களை திருச்சியில் சந்தித்தனர் .           




 இந்தியாவில் மக்கள் ஓட்டளித்து தங்களது ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் ஜனநாயக உரிமையை EVM வாக்கு எந்திர தேர்தல் முறையானது அல்ல என்றுமEVM மில் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி வாக்குகளை திருடவும் செய்வதாகவும் அதன் மூலம் மக்களின் வாக்குகளை பெறாமலேயே முறைகேடாக அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்பதும் உலக அளவில் நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும் என்றும் '  மேற்கண்ட காரணத்தினால் அமெரிக்கா ரஷ்யா, பிரிட்டன், ஜப்பான், தென் கொரியா ,உட்பட தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளான உலகின் மிகப் பெரும்பான்மையான நாடுகள் EVMமை பயன்படுத்தாமல் வாக்குச்சீட்டு முறைக்கு மாறிவிட்டன என்றும்தேர்தல்களும் நடத்தப்படுகின்றன .    என்றும்.         ஜெர்மனி, அயர்லாந்து ,பராகுவே, நெதர்லாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் EVMஐ பயன்படுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததனால் முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டதனால் இந்நாடுகள் E.V.Mஐ தடை செய்து வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பி விட்டன என்றும்,     ஆனால் இந்தியாவில் மட்டும் EVM மெஷினை தற்போது வரை விடாமல் ஆளுகிற இந்திய அரசுகள் ஆதரிக்கின்றன என்றும்,    EVM மெசினால் பல்வேறு குற்றச்சாட்டுகளும், முறைகளும் நடைபெறுவதாக ஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டப்படும் EVM மிஷினை விடுத்து வாக்குச்சீட்டு தேர்தலுக்கு இந்தியாவை ஆளும் எந்த அரசும் தயாராக இல்லை என்பதையும் தெரிவித்தனர் .E.V.M. மிஷினில் எந்தவித மோசடியும் செய்யவே முடியாது என்று பேசி வரும் பாரதிய ஜனதா கட்சி 2009 ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது  EVM க்கு  எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது . எப்படி எல்லாம் EVM மிஷினில் முறைகேடுகள் நடக்கின்றன என்பதை விளக்கி பல்வேறு ஆதாரங்களுடன் 2010 பிப்ரவரியில் ஒரு புத்தகமே வெளியிட்டது. 

அந்தப் புத்தகத்தின் பெயர்" "டமாக்ரசி ஹார்ட் டிஸ்க் கேன் வி ட்ரஸ்ட் யுவர் எலக்ட்ரானிக் வாஷிங் மெஷின்" என்ற புத்தகத்தை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டது . அந்த புத்தகத்திற்கு எல்.கே. அத்வானியும், சந்திரபாபு  நாயுடுவின்   முன்னுரையுடன் பாரத ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் எழுதிய இந்த புத்தகத்தை நிதின் கட்காரி வெளியிட்டார் . இவ்வாறு பல மேற்கோள்களை ஆதாரப்பூர்வமாக காண்பித்து EVMமிசின் மோசடியை பற்றி தலைவர் ஆனந்தன் அவர்களும் ஒருங்கிணைப்பாளர் நந்தினி அவர்களும் உரையாற்றினார்கள் . மேற்கண்ட புத்தகத்தின் பக்கம் 52 இல் ஓம் எஸ் சேகர் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கூறிய தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.      அதாவது மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் எம்பி மகனிடம் EVM மிஷினில் முறைகேடுகள் செய்து உங்களை வெற்றி பெற வைக்க முடியும் நீங்கள் போட்டியிடும் தொகுதியில் உள்ள 50 சதவீத வாக்கு சாவடிகளில் தேர்தல் முடிவுகளை மாற்றி தருகிறோம் எந்தெந்த வாக்கு சாவடிகள் என்பதை நீங்களே தேர்ந்தெடுத்து கொடுங்கள் 5 கோடி ரூபாய் கொடுத்தால் போதும் என்றும் EVM தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் /மேற்கண்ட மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நபரை அணுகியுள்ளார் . இதே போல பழைய எம்பி எம்எல்ஏக்கள் மோசடி செய்து தேர்தலில் வெற்றி பெற பொறியாளர்கள் உதவி உள்ளதாகவும் குறிப்பிடுகிறார் ஜி வி எல் நரசிம்மர் அவர்கள் மேலும் 2009 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு சாதமாக EVM ல் திமுகவிற்கும்   | காங்கிரஸ்க்கும் ஆதரவுடன் தேர்தல் நடந்ததாக பல்வேறு ஆதாரங்களுடன் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார்.      மேலும் இந்தியாவில் 19 லட்சம் வாக்கு எந்திரம் EVM மிஷின்களை காணவில்லை என்றும் 2018 ஆம் ஆண்டு பிரச்சனை பெரிதாக கிளம்பியது . இவ்வாறு பலவிதமான மோசடிகளை EVM மிஷின் மூலம் ஆளுகிற எந்த அரசாக இருந்தாலும் செய்கின்றன என்றும் தலைவர் ஆனந்தனும் நந்தினி அவர்களும் பல்வேறு முழக்கமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் .

Post a Comment

0 Comments