திருச்சி நவ.19-
தேசிய சட்டப்பணிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கண் பரிசோதனை மருத்துவ முகாம் இன்று காலை நடைபெற்றது.சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளர் மாண்புமிகு நீதிபதி பிரபு தலைமை தாங்கினார் .முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி மாண்புமிகு சாமிநாதன் முகாமை தொடங்கி வைத்தார். மாண்புமிகு நீதிபதிகள் கார்த்திகா, வெங்கடேசன், புவியரசு , சௌமியா மேத்யூ,கலைவாணி, அண்ணாமலை,அரசு வழக்கறிஞர் சவரிமுத்து,,வழக்கறிஞர் சரபோஜி ,அரசு மருத்துவமனை கண் மருத்துவர்கள் பாரதி தேவி, ஜெயப்பிரியா குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் பி.வி.வெங்கட் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். நன்றி உரை மாண்புமிகு நீதிபதி கார்த்திகா அவர்கள் கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செய்திருந்தன.


0 Comments