தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று (15-10-2025) கூட்டத்தொடரில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தனது தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட் விரிவாக்கத்திற்காக காந்தி மார்க்கெட் அருகே அமைந்துள்ள மகளிர் சிறைச்சாலையினை புறநகர் பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மகளிர் சிறைச்சாலையை புறநகர் பகுதிக்கு மாற்ற மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இடம் கேட்கப்பட்டுள்ளது, இடம் கிடைத்தவுடன் மகளிர் சிறைச்சாலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

0 Comments