திருச்சி இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை “பச்சை பொன் முருங்கை விளைச்சல் மற்றும் தொழில் முனைவு” என்ற தலைப்பில் ஒரு பயிற்சி பட்டறையை மாணவர்களுக்கு நடத்தியது. நிகழ்ச்சியில் இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் செயலாளர் ஜி. இராஜசேகரன் அவர்களின் தொடக்க உரையுடன் ஆரம்பமானது.
அவர் இளம் தலைமுறையினர் நிலைத்திருக்கும் விவசாய முறைகளையும் தொழில்முனைவு திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அடுத்து, இயக்குநர் டாக்டர். ஜி. பாலகிருஷ்ணன் வாழ்த்துரையை வழங்கி, ஆரோக்கியத்தையும் விவசாய நவீனத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
பதிவாளர் டாக்டர் எம். அனுசூயா நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் முக்கிய அம்சங்களை விளக்கும் பிரதிநிதி உரையினை வழங்கினார். பிரதான விருந்தினராக ரஞ்சித் குமார் கிருஷ்ணமூர்த்தி, நிறுவனர் மற்றும் இயக்குநர், ஏ.வி.கே.ஆர். முருங்கை ப்ராமிஸ் வெல்னஸ் ஓ.பி.சி (பி) லிமிடெட், புதுப்பட்டி, கும்பம், தேனி மாவட்டம் கலந்து கொண்டு, “ஆரோக்கிய தொழில்முனைவு பயணம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், முருங்கை பொருட்களின் மதிப்பூட்டல், நிலைத்திருக்கும் மற்றும் ஒருங்கிணைந்த விவசாயம், உயர் அடர்த்தி முருங்கை பயிரிடும் தொழில்நுட்பம், முருங்கையின் ஊட்டச்சத்து மற்றும் பிற சூப்பர் உணவுகளுடன் ஒப்பீடு, நியூட்ராசூட்டிக்கல் துறையின் எதிர்கால வாய்ப்புகள், முருங்கை பொருட்களின் மருந்தியல் மற்றும் அழகு சாதனப் பயன்பாடுகள், முருங்கை காப்சூல் தயாரிப்பு, ஆகிய முக்கிய அம்சங்களை விவரித்தார் அவரது தொழில்முனைவு அனுபவத்தை பகிர்ந்து கொண்டு மாணவர்களை ஆரோக்கியம் சார்ந்த விவசாயத் துறையில் புதுமைகளை முயற்சிக்க ஊக்குவித்தார். இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தவர்கள் — டாக்டர் கே. சித்ராதேவி (முதல்வர், இணைந்த சுகாதார அறிவியல் பள்ளி), டாக்டர் டி. சஸ்ரீராம், டாக்டர் ஆர். பரத்குமார், மற்றும் டாக்டர் ப. வரலக்ஷ்மி ஆகியோர் ஆவர். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா துறை மாணவர்கள் வரவேற்பு உரை மற்றும் நன்றி உரை வழங்கினர். இவ்வாறு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.

0 Comments