திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட எம் டி சாலையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
மேலும் முகாமில் கலந்து கொண்டு அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார் முகாமில் மேலாண்மை துறை சார்பில் நத்தம் பட்டா துவாக்குடி பொன்னகரைச் சேர்ந்த சூரிய குமாரி அக்பர் சாலையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் ராவுத்தான் மேடை சேர்ந்த சீனிவாசன் ஆகியோருக்கு பட்டாக்களை வழங்கினார் முகாமில் துவாக்குடி நகராட்சி தலைவர் காயம்பு நகராட்சி ஆணையர் பட்டுசாமி திருவெரும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம் சமூகத்திட்ட தனி தாசில்தார் தனலட்சுமி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசுத்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்

0 Comments