NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** ஊழியர் மீது தாக்குதல் நடத்திய திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்யக்கோரி முத்திரையர் சங்கத்தினர் கே.கே.நகர் காவல் நிலையத்தை முற்றுகை

NEWS UPDATE

3/recent/ticker-posts

ஊழியர் மீது தாக்குதல் நடத்திய திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்யக்கோரி முத்திரையர் சங்கத்தினர் கே.கே.நகர் காவல் நிலையத்தை முற்றுகை

 ஊழியர் மீது தாக்குதல் நடத்திய திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்யக்கோரி முத்திரையர் சங்கத்தினர் கே.கே.நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் திருச்சியில் பரபரப்பு:-





கடந்த இரு தினங்களுக்கு முன்பு கே கே நகரை சேர்ந்த திமுக பெண் கவுன்சிலருக்கும் ஒப்பந்த பணியில் இருந்த ஊழியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாகவும் மாறியது. அதனைத் தொடர்ந்து கவுன்சிலர் அவரது மகன் உட்பட ஆறு பேர் ஊழியர்களை தாக்கியதாகவும் தரக்குறைவாக பேசியதாகவும் ஆனால் காவல்துறை ஆளும் கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் என்கின்ற காரணத்தினால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கவுன்சிலரின் வீட்டை தாக்கி சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்து தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பெண்கள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இன்று கேகே நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.  இதனால் அந்தப் பகுதியே மிகவும் பரபரப்பாக போர்க்களம் போல காணப்பட்டது.  காவல்துறையினர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.  இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கேகே நகர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments