NEWS UPDATE *** அஜித் மரண வழக்கு.. திடீர் திருப்பம்.. குற்றப்பத்திரிகையில் DSP பெயர் - CBI அதிரடி *** திருச்சியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம்

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம்

 திருச்சி   09.07.2025

.தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் மணி நந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாநில தலைமை பொதுச் செயலாளர் லட்சுமணன், ராஜகோபால், பாராளுமன்ற குழு தலைவர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 




பீகாரில் அமல் படுத்தியதைப் போல தமிழ்நாட்டிலும் ஜாதி வாரியாக கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வது ,தமிழக காவல்துறையின் அதிகார மீறலை நிறுத்த செய்வது ,தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். அரசு நெல் கொள்முதல் செய்ய பெரிய அளவிலான குடோன்களை நிரந்தரமாக கட்ட வேண்டும் .தமிழகத்தில் இருக்கும்  தனியார் மது ஆலைகளை அரசுடமையாக்க வேண்டும். என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  




இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மாநிலத் துணைத் தலைவர்கள் முருகப்பன், பார்த்திபன், டாக்டர் விஸ்வநாதன், ராமமூர்த்தி உட்பட கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பொதுக்குழு குழு உறுப்பினர்கள், அணி தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .நிறைவாக திருச்சி மாவட்ட தலைவர் செந்தில்குமார் நன்றி உரை கூறினார்.

Post a Comment

0 Comments