சாமானிய மக்கள் நல கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருச்சியில் தனியார் ஹோட்டல் அறையில் நடைபெற்றது . கூட்டத்தில் கட்சியின் தலைவர் குணசேகரன் தலைமை ஏற்றார் .
சாமானிய மக்கள் நல கட்சியின் மாவட்ட பொருளாளர் ஜோசப் அவர்கள் கலந்து கொண்டார் . இந்த கூட்டத்தில் ஏறத்தாழ 33 பேர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி சாமானிய மக்கள் நல கட்சியில் இணைந்தனர் . பீமநகரைச் சேர்ந்த வீரமணி அவர்களும் கட்சியில் இணைந்தார். திராவிட முன்னேற்ற முன்னேற்றக் கழக சிறுபான்மை பிரிவு திருச்சி மாவட்ட பொறுப்பாளர் ரசூல் கழகத்திலிருந்து விலகி சாமானிய மக்கள் கட்சியில் இணைந்தார்.
இக்கட்சியின் தலைவர் உரையாற்றும் போது தமிழகத்தில் தற்போது மணல் குவாரிகளை திறப்பதற்கு அரசு அனுமதித்து உள்ள நிலையில் மணல் குவாரிகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் . மேலும் தற்போது இயற்கை வளங்களை சுரண்டும் கனிம வள கொள்ளையர்களையும் கண்டிப்பதாக அறிவித்தார் .

0 Comments