NEWS UPDATE *** தனித்தொகுதிகளில் கிறிஸ்தவர்கள் போட்டியிடுவதை எதிர்த்து அர்ஜுன் சம்பத் வழக்கு *** தந்தை பெரியாரை அவமதித்து சாதியவாதியாக சித்தரித்ததை கண்டித்து வினாத்தாளை கிழித்தெறியும் போராட்டம் !

NEWS UPDATE

3/recent/ticker-posts

தந்தை பெரியாரை அவமதித்து சாதியவாதியாக சித்தரித்ததை கண்டித்து வினாத்தாளை கிழித்தெறியும் போராட்டம் !

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் ஒன்றிய அரசு பணிகளுக்கு தேர்வு நடத்துகின்றUPSC கேள்வித்தாளில் தந்தை பெரியாரை அவமதித்து சாதியவாதியாக சித்தரித்ததை கண்டித்து வினாத்தாளை கிழித்தெறியும் போராட்டம் அறிவித்திருந்ததை தொடர்ந்து இன்று திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு மண்டல பொறுப்பாளர் சீர்காழி செல்வம் கழக பிரச்சார செயலாளர் சீனி விடுதலை அரசு ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாநகர் கழக தலைவர் ஜே வின்சன்ட் ஜெயக்குமார் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்றது




இந்தியா முழுவதும் நடைபெற்ற சிவில் சர்வீஸ் UPSC முதல்நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியில் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார் என்று கேள்விக்கு பதிலாக நான்கு பெயர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதில் (a) பெரியார் ராமசாமி நாயக்கர் (b) டாக்டர் அம்பேத்கர் பெயர்களை கொடுத்துவிட்டு அதில் சரியாக விடை எழுதுமாறு கேட்கிறார்கள் வாழ்நாள் முழுவதும் சாதி ஒழிப்புக்காக பாடுபட்ட பெரியார் பெயருக்குப்பின்னால்  நாயக்கர் என்று குறிப்பிடப்பட்டு பெரியாரை சிறுமைப்படுத்துகிறார்கள் ,பெரியார் சாதி உணர்வாளர் போல சித்தரிக்கப்படுகிறது  "பெரியார் பெயரை சாதி அடையாளத்துடன் வெளியிடப்பட்டதை கண்டித்து"  UPSC வினாத்தாளை கிழித்தெறியும்  போராட்டத்தை மாநில முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு பெரியார் சிலை முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம் , தோழமை அமைப்புகளோடு இணைந்து போராட்டம் ஒன்றிய நடத்த வேண்டுகோள் செய்திருந்தார்






குடிமக்கள் உரிமை பொது மன்றம் வழக்குரைஞர் கமருதீன், மக்கள் கலை இலக்கியக் கழக மாவட்ட செயலாளர் ஜீவா, மக்கள் கலை இலக்கிய கழக மாநில செயற்குழு உறுப்பினர் லதா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், தெற்கு மாவட்ட செயலாளர் ஆற்றல் அரசு, திருவரம்பூர் பகுதி  சிறுத்தை குணா, வழக்குரைஞர் அணி பழனியப்பன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ஜெயக்குமார், மக்கள் அதிகாரம் தரைக்கடை வியாபாரிகள் சங்கம் பொறுப்பாளர் இந்திரா, தந்தை பெரியார் ஓட்டல் தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் மீனா, ரெட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.இராமலிங்கம், பாலக்கரை அப்துல் ரஹீம்ஆகியோர் பங்கேற்று சிவில் தேர்வு வினாத்தாள் நகலை கிழித்தெறிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்


கண்டன உரையாற்றி வின்சென்ட் பேசுகையில் பெரியார் சாதியை எதிர்த்தார். ஆனால் ,எந்த சாதிக்காரனையும் கொலை செய்யவில்லை..!

மதத்தை எதிர்த்தார். ஆனால் ,எந்த மதவாதியையும் கொலை செய்யவில்லை..!

பெண் அடிமையை எதிர்த்தார். ஆனால் ,எந்த ஆணையும் கொலை செய்யவில்லை..!

இந்திய தேசியத்தை எதிர்த்தார். ஆனால் எந்த இந்தியனையும் கொலை செய்யவில்லை..!

மூடப்பழக்கத்தை விதைக்கும் கடவுளை எதிர்த்தார்..!ஆனால் ,எந்த வழிபாட்டுத் தலத்தையும் இடிக்கவில்லை..!

மூடநம்பிக்கையை ஒழித்தார். ஆனால் எந்த சாமியாரையும் கொலை செய்யவில்லை..! அதனால் தான் ,

அவர் தந்தை பெரியார் என்று குறிப்பிட்டு நிறைவுறையாற்றினார்.

Post a Comment

0 Comments