NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி - வட இந்தியா முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிப்பு

NEWS UPDATE

3/recent/ticker-posts

ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி - வட இந்தியா முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிப்பு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தின் கீழ் இந்திய ராணுவம் துல்லியமாக பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், வட இந்தியா முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா, பிகானீர் உள்ளிட்ட பகுதிகளில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதேபோன்று, இந்திய ராணுவத்தின் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானிலும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால் விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments