திருச்சி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று லோகா டவர் மேல சிந்தாமணியில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் தலைமையில் திருச்சி மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் பஜார் மொய்தீன் கிழக்கு தொகுதி அமைப்பாளர் மன்சூர் அலி ஆகியோர் முன்னிலையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் மத்திய மாநில முன்னாள் அமைச்சர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்பித்தார் . கோவிந்தராஜன் முருகேசன் முகைதீன் அந்தோணி ராஜ் பேட்ரிக் ராஜ்குமார் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . முரளி திருச்சி மாவட்ட பொருளாளர் நன்றி உரையாற்றினார்


0 Comments