மின் வாரிய ஊழியர்கள் சங்கத்தினரின் திருச்சி மண்டல அளவிலான தர்ணா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தென்னூர் மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை சங்கத்தின் மாநில துணை தலைவர் ரெங்கராஜன் தலைமையேற்று துவக்கவுரை நிகழ்த்தினார் .திருச்சி வட்டத்தின் செயலாளர் பழனியாண்டி , புதுகோட்டை வட்டத்தின் செயலாளர் நடராஜன் , திண்டுக்கல் வட்டத்தின் செயலாளர் திருமலைசாமி பெரம்பலூர் வட்டத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் .
திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் நிறைவுரை ஆற்றினார் . வட்ட செயலாளர் நடராஜன் நன்றி கூறினார் . இதில் எராளமான மின்வாரிய ஊழியர்கள் கலந்துகொண்டனர் .

0 Comments