திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய மாபெரும் கண் சிகிச்சை முகாம் இன்று 26.04.26 காலை 9 மணியளவில் காந்தி மார்க்கெட் பின் பகுதி தையால்காரத் தெரு கீர்த்தனா மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமை வழக்கறிஞர் திரு.S.சுதர்சன் அவர்கள் ஐயப்பா சேவா சங்க செயலாளர் திரு M. ஸ்ரீதர் அவர்கள் மற்றும் துணைத்தலைவர் திரு. S. முத்து அவர்களும் துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்விற்கு சங்கத் தலைவர் J.மகேஷ் தலைமையில் சங்க செயலாளர் C. R.அம்சராம் வரவேற்புரை ஆற்ற இனிதே துவங்கியது.
இந்நிகழ்வில் இளங்கோவன் , மனோகரன் வரதாச்சாரி, ராம்குமார், பெருமாள், முரளிதரன், வெங்கடேசன், சீனிவாசன் கார்த்திக் , மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இம்முகாமில் 152 நபர்கள் கண் பரிசோதனை செய்து 29 நபர்கள் அறுவை சிகிச்சை செய்ய மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

0 Comments