NEWS UPDATE *** தனித்தொகுதிகளில் கிறிஸ்தவர்கள் போட்டியிடுவதை எதிர்த்து அர்ஜுன் சம்பத் வழக்கு *** தமிழ்நாடு பார்க்கவ குல பேரவை ஆசிய மொத்த அமைப்புக்களின் சார்பாக உரிமை மீட்பு கலந்தாய்வு கூட்டம்

NEWS UPDATE

3/recent/ticker-posts

தமிழ்நாடு பார்க்கவ குல பேரவை ஆசிய மொத்த அமைப்புக்களின் சார்பாக உரிமை மீட்பு கலந்தாய்வு கூட்டம்

பார்க்கவ குல கூட்டமைப்பான பார்க்கவன் சோழப் பேரவை  . தமிழ் குடிமக்கள் மக்கள் கட்சி.   தென்னாட்டு பார்க்கவ குல சங்கம், மாவீரன் ரூசோ பேரவை / தமிழ்நாடு பார்க்கவ குல பேரவை ஆசிய மொத்த அமைப்புக்களின் சார்பாக உரிமை மீட்பு கலந்தாய்வு கூட்டம் 2.2.2026 இன்று திருச்சியில் நடந்தது. இக்கூட்டத்தில்  தலைவர் எம்.ரவி . பத்திரிக்கையாளர் களிடம் அவர்களுக்கான கோரிக்கைகளையும், தீர்மானங்களையும் , வி.சி.க. தலைவர் திருமாவளவன் அவர்களுக்கும் அவர்களது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தார்.




நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள்


1.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பத்து சட்டமன்ற உறுப்பினர் இரண்டு. அமைச்சர்கள் வழங்குவதாக தேர்தல் அறிக்கையிலேயே அறிவிக்கும் கட்சிக்கே எண்பது லட்சம் மக்கள் தொகை கொண்ட பார்க்கவ குலத்தின் ஆதரவு என்றும்


2.சாதீய வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிசிஆர் தவறாக பழிவாங்கும் முறையில் போதிய விசாரணை இன்றி வழக்கு பதியப்படுவது ஏற்றுக் கொள்ள தக்கதல்ல எனவே தமிழ்நாடு அரசு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதுடன் காவல்துறைக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும்


3.இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல் திருமாவளவன் அவர்கள் மாமன்னர் உடையார் ராசராச சோழன் அவர்களையும் உடையார் ராசேந்திர சோழன் அவர்களையும் சனாதனிகள் தமிழுக்கும் தமிழருக்கும் விரோதிகள் என்று ஒருமையில் பேசி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் அவருடைய பேச்சை உடனடியாக எந்தவொரு நிபந்தனையும் இன்றி மன்னிப்பு கேட்டு திரும்பப் பெற வேண்டும் இல்லையெனில் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிற அனைத்து தொகுதிகளிலும் டெப்பாசிட் இழக்கும் வகையில் அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் பரப்புரை செய்ய தீர்மானம் விசிக வுக்கு எச்சரிக்கையாகவும், கண்டனமாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


4.விசிக ஏதோ தமிழ்நாட்டின் ஏகபோக உரிமையை பெற்றது போன்ற அதன் செயல்பாட்டை அனைத்து கட்சிகளும் கண்டிப்பதுடன் விசிக என்னும் தீய சக்தியை தமிழ் மண்ணில் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


5.மத்திய மாநில அரசுகள் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments