NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

NEWS UPDATE

3/recent/ticker-posts

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் 44ஐ தொழிலாளர்களுக்கு பாதகமாக நான்கு சட்ட தொகுப்புகளாக  ஒன்றிய அரசு தன்னிச்சையாக மாற்றியதையும்,தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும். திருத்தப்பட்ட  தொழிலாளர் நல சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும்24, 25, 26- தேதிகளை கருப்பு தினமாக அனுசரிப்பது என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் இனியன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் முரளி, மாநில செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் பாக்கிய ராஜ், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்

Post a Comment

0 Comments