NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** திருச்சியில் தமிழர் தேசம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சியில் தமிழர் தேசம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்



திருச்சியில் நடைபெற உள்ள முத்தரையர்கள் அதிகார மீட்பு மாநாடு வெற்றி மாநாடாக அமைய பாடுபட வேண்டும் தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கேகே செல்வகுமார் பேச்சு .







தமிழர் தேசம் கட்சியின் சார்பில் வருகிற ஜனவரி 25 -ந் தேதி திருச்சியில் முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு நடைபெற உள்ளது.




இந்த மாநாடு தொடர்பாக அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று (புதன்கிழமை) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது .

.

தமிழர் தேசம் கட்சியின் தலைவரும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவருமான கே கே செல்வகுமார் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், மாநில அமைப்பு செயலாளர் மகுடேஸ்வரன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்துரைகுணசேகரன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில அமைப்பாளர் கள்ளிக்குடி எம். ராஜேந்திரன், கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் வள்ளல் வழக்கறிஞர் கௌதம் மணி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..




கூட்டத்தில் கே.கே .செல்வகுமார் பேசும்போது,

வருகிற ஜனவரி 25ஆம் தேதி திருச்சியில் முத்தரையர் அதிகார மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் வெற்றி மாநாடாக அமைய அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் புதிய நிர்வாகிகளை அவர் அறிமுகம் செய்தார்.

Post a Comment

0 Comments