NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** திருச்சியில் கள்ள சந்தையில் படுஜோராக மது விற்பனை ???

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சியில் கள்ள சந்தையில் படுஜோராக மது விற்பனை ???

திருச்சியின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில் கருங்காடு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்து வந்தார்.



இவர் அருகில் உள்ள அரசு மதுபானக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்று வருகிறார்.

தனது தோட்டப்பகுதியில் மறைத்து வைத்து மதுவை விற்கும் நிகழ்வை செல்போனில் பதிவு செய்த நபர் ஒருவர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அந்த நபர் திருச்சியின் பல இடங்களில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாகவும், தாங்கள் போலீசாருக்கு பணம் வழங்கி தான் இந்த தொழிலைச் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் சட்ட விரோத மதுவிற்பனையைத் தடுக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments