NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு !

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு !

 


திருச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி கேலிச்சித்திரம் அதிமுக நிர்வாகிகள் மாநகர போலீஸ் ஆணையரிடம் மனு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு மாவட்டச் செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் வழங்கினர்.



 அதில் அவர்கள் கூறியிருப்பதாவது

திமுக ஐடி விங் மாநில செயலாளர் அமைச்சர் டி ஆர் பி ராஜா கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகளோடு

ஆபாசமாக ஒரு கேலி சித்திரத்தை இணைத்து பதிவிட்டுள்ளார்.இதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.அதிமுக தொண்டர்களின் உணர்ச்சியை தூண்டு வகையிலும் புண்படுத்தும் வகையிலும் மற்றும் அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் திட்டமிட்ட சதியாக இது உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது .ஆகவே இந்த செயலானது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் தண்டனை கூறியது. ஆகவே அவதூறு பதிவினை எக்ஸ சமூக வலைதளத்தில் பதிவிட்ட டி ஆர் பி ராஜா மீதும் அதனை பகிர்ந்தவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து கேலிச்சித்திரத்தை உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

மனு அளிக்கும் நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர். பாராளுமன்ற உறுப்பினருமான டி.ரத்தினவேல், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் அரவிந்தன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் கிர்ஷாந்த் சுப்பிரமணி,  நசீமா பாரிக் , பகுதி செயலாளர்கள் அன்பழகன், எம்ஆர்.ஆர். முஸ்தபா, நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி, புத்தூர் ராஜேந்திரன், வாசுதேவன், கலிலுல் ரகுமான், ரோஜர் , கலைவாணன், அணி நிர்வாகிகள் ஐ.டி. பிரிவு வெங்கட் பிரபு, இலக்கிய அணி பாலாஜி, கலைப்பிரிவு ஜான் எட்வர்ட் குமார், சிறுபான்மை பிரிவு அப்பாஸ், பேரவை மாவட்ட தலைவர் எனர்ஜி அப்துல் ரஹ்மான், இணைச் செயலாளர்கள் தினேஷ் பாபு, என்ஜினீயர் ரமேஷ், துணைச் செயலாளர்கள் கருமண்டபம் சுரேந்தர், கங்கை மணி, திருநாவுக்கரசு. மீனவரணி மாவட்ட செயலாளர் கவுன்சிலர் அம்பிகாபதி, மீனவரணி தலைவர் ஆதவன், இளைஞரணி இணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார், மகளிர் அணி ஜெயஸ்ரீ, வர்த்தக பிரிவு பிரபாகரன், மாணவர் அணி கல்லுக்குழி மனோஜ்குமார், ஒத்தக்கடை மகேந்திரன், எஸ் எம் டி மணிகண்டன், ஆடிட்டர் ரவி, வக்கீல்கள் வரகனேரி சசிகுமார், முல்லை சுரேஷ், முத்துமாரி, கௌசல்யா, ஜெயராமன், டி.ஆர். சுரேஷ்குமார், அப்பாக்குட்டி, ரமணிலால், கலைப்பிரிவு உறையூர் சாதிக் அலி, வினோத் குமார், ,புத்தூர் பாலு, பொன். அகிலாண்டம், கல்லுக்குழி முருகன், செல்லப்பா, வசந்தம் செல்வமணி, உடையான் பட்டி செல்வம், கே.டி. ஏ.ஆனந்தராஜ், இலியாஸ், ஐ.டி. பிரிவு நாகராஜ், கதிரவன், விஸ்வா, பிரித்திவிராஜ், பூக்கடை முத்துக்குமார், இ.பி. மோகன், புத்தூர் ரமேஷ், வாழைக்காய் மண்டி சுரேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநகர கமிஷனரிடம் அதிமுகவினர் மனு கொடுக்க செல்லும்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

Post a Comment

0 Comments