NEWS UPDATE *** தனித்தொகுதிகளில் கிறிஸ்தவர்கள் போட்டியிடுவதை எதிர்த்து அர்ஜுன் சம்பத் வழக்கு *** பஞ்சாப் அரசாங்கம் விவசாய சங்க தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் செய்த விவசாய சங்க தலைவர்களை குண்டுகட்டாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை

NEWS UPDATE

3/recent/ticker-posts

பஞ்சாப் அரசாங்கம் விவசாய சங்க தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் செய்த விவசாய சங்க தலைவர்களை குண்டுகட்டாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை

 

பஞ்சாபில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக  போராடிவரும் விவசாயிகளை கைது செய்துள்ள தோடு அவர்கள் தங்கி இருந்த கூடாரங்களையும்  ,வாகனங்களையும் காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கி இருக்கிறது.




மேலும் ஒன்றிய அமைச்சருடன் பேச்சுவார்த்தை சென்ற விவசாய சங்க தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. பஞ்சாப் அரசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து.இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சென்ற ஐக்கிய விவசாய முன்னணி திருச்சி மாவட்ட  ஒருங்கிணைப்பாளர்.

அயிலை சிவசூரியன் மற்றும் R. நடராஜன்/ சிதம்பரம் / சம்சுதீன் / செழியன் / செல்வராசு / முத்து/ வின்சென்ட் / ஆக லிங்கம் / சேட்டு / சீனீவாசன் / கணேசன் / உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள்தங்களை எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக  ஆர்ப்பாட்டம் செய்தனர்.



அங்கு காவலுக்கு இருந்த திருச்சி மாநகர காவல் துறையினர் உங்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை எனவே உங்களை கைது செய்கிறோம் என விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றிகைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இந் நடவடிக்கைக்கு கூட்டத்திற்கு வருகை தந்திருந்த .மற்ற விவசாய சங்க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதும்  மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக அவர்களை விடுதலை செய்து  கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ததின் பேரில் கைது செய்யப்பட்ட அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்

Post a Comment

0 Comments