NEWS UPDATE *** தனித்தொகுதிகளில் கிறிஸ்தவர்கள் போட்டியிடுவதை எதிர்த்து அர்ஜுன் சம்பத் வழக்கு *** திருச்சி - பழைய டயர் தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி - பழைய டயர் தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து

திருச்சியில் இன்று விடியற்காலை   சம்பவம் பழைய டயர் தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து 10 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்



திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனை எதிர்புறம் பழைய டயர் கம்பெனி ஒன்று உள்ளது இங்கு பழைய டயர்களுக்கு ரீ பட்டன்  செய்யப்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் உள்ள பழைய டயர் குடோனில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.  இது பற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர்  லியோ ஜோசப் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர்தீயணைப்பு வண்டியை பயன்படுத்தி தண்ணீரை பீச்சி அடித்து  அணைக்க போராடினர். இருந்தபோதிலும்  இருப்பினும் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனால் மீண்டும் இரண்டு தீ இணைப்பு வாகனங்களை கொண்டு வந்து தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பின்னர் அருகாமையில் உள்ள திருவெறும்பூர் மற்றும் திருவரங்கம் தீயணைப்பு நிலையத்திலிருந்து இரண்டு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. மேலும் மாநகராட்சி சார்பில் ஐந்து லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு ஒரு வழியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 


சுமார் 10 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பணிகள் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.  இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள டயர்கள் எரிந்து நாசமானது. மேலும் இரும்பு கண்டைனர் ஒன்றும் சேதமடைந்தது.  இந்த தீ விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.


Post a Comment

0 Comments