திருச்சி
திருச்சி மாவட்ட பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வரும் ஒன்பதாம் ஆண்டு விழா போராட்டம் நடைபெறுவது குறித்து நடவடிக்கை குழு பொது செயலாளர் சந்திரசேகர் திருச்சி திருச்சி பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது
இந்த சந்திப்பில் சந்திரசேகர் கூறியதாவது திருச்சி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றவர்களுக்கான 5 சங்கங்களை அங்கத்தினர்களாக கொண்டு, 1000-கணக்கான பார்வையற்றோர்களின் முன்னேற்றம் மற்றும் உரிமைகளை பெற்று வழங்குகின்ற அமைப்பாக சேவைபுரிந்து வருகிறது. எங்கள் கூட்டமைப்பின் மூலம் அரசுத்துறைகளில் பார்வையற்றோர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட தடையாக இருக்கும் அரசாணை எண் 24-ஐ திரும்ப பெற்றுக்கொண்டு அரசாணை எண் 20 மற்றும் 159-ன் அடிப்படையில் பார்வையற்றோர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ1500-ஐ, அண்டை மாநிலங்களில் வழங்கும் போல உயர்த்தி ரூ5000 ஆக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 09.02.2026 திங்கட்கிழமை அன்று ஒரு நாள் அடையாள உண்ணாநிலை போராட்டத்தின் வாயிலாக, தமிழக அரசை வலியுறுத்த திட்டமிட்டு இருக்கிறோம். அமைதியான முறையில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் அருகில் (பழைய ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழி) எங்கள் போராட்டத்தை நடத்திட இருக்கின்றோம். அதுசமயம் எங்களுடைய 3 அம்ச கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பார்வையற்றோர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு வெற்றி கிடைத்திட உதவுமாறு தங்களை அமைப்பின் சார்பில் பணிவோடு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்

0 Comments