NEWS UPDATE *** தனித்தொகுதிகளில் கிறிஸ்தவர்கள் போட்டியிடுவதை எதிர்த்து அர்ஜுன் சம்பத் வழக்கு *** திருச்சி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம்

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம்

ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. 






திருச்சி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது போராட்டத்துக்கு நீலகண்டன், நாகராஜன், குமாரவேல், உ துமான் அலி ,பால்பாண்டி நவநீதன ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன்,தமிழ்நாடு ஆசிரியர் கழக மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை  தொடங்கி வைத்து பேசினார். உண்ணாவிரதத்தில்உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும் முதுகலை உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்  உடற்கல்வி இயக்குனர் ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இடையான ஊதிய வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பதினொரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரிய ர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments