NEWS UPDATE *** கேரளாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 கூப்பன் பாஜக வாக்குறுதி *** சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்!

NEWS UPDATE

3/recent/ticker-posts

சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்!



பணி நிரந்தரம் செய்யாததைக் கண்டித்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



துப்புரவு பணியைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.



போராட்டத்தின்போது வெயிலின் தாக்கத்தால் ஒருவர் மயங்கி விழுந்தார். ஆட்சியமைத்து 4 ஆண்டுகள் ஆகியும் திமுக தங்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள துப்புரவுத் தொழிலாளர்கள், பணியைத் தனியார் மயமாக்குவதை அரசு கைவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments