NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கும் ஆஞ்சியோகிராபி சிகிச்சைகள் - திருச்சி மா காவேரி மற்றும் காவேரி ஹார்ட்சிட்டி சாதனை !

NEWS UPDATE

3/recent/ticker-posts

பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கும் ஆஞ்சியோகிராபி சிகிச்சைகள் - திருச்சி மா காவேரி மற்றும் காவேரி ஹார்ட்சிட்டி சாதனை !

பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கும் ஆஞ்சியோகிராபி சிகிச்சைகள்: திருச்சி மா காவேரி மற்றும் காவேரி ஹார்ட்சிட்டி சாதனை


●48 மணி நேரமே ஆன, 2 கிலோ எடையுள்ள, பச்சிளம் குழந்தைக்கு உயிர்காக்கும் பலூன் பல்மோனரி வால்வுலோபிளாஸ்டி செய்யப்பட்டது

● 11 நாட்களே ஆன, 1.5 கிலோ எடையுள்ள மற்றொரு பச்சிளம் குழந்தைக்கு 4x2 மிமீ அளவுள்ள ஒரு சிறிய சாதனம் பொருத்தப்பட்டு அதன் இதயத்தில் இருந்த அசாதாரண இரத்த நாளம் சரிசெய்யப்பட்டது.




திருச்சி, மே 15, 2025:

தென் தமிழகத்தில் முதன்முறையாக பிறந்த சில நாட்களே ஆன இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சைகளைச் செய்து பச்சிளம் குழந்தைகளின் சிக்கலான இதய பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு அளித்துள்ளன மா காவேரி மற்றும் காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனைகள்.


பிறந்து 48 மணி நேரமே ஆன, 2 கிலோ எடையுள்ள பெண் குழந்தை ஒன்றின் இதய வால்வு மிக சுருங்கிய நிலையில் இருந்தது. இந்த சிக்கலான இதயப் பிரச்சினையால் குழந்தைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை. அதே போல், பிறந்து 11 நாட்களான, 1.5 கிலோ எடையுள்ள பெண் குழந்தைக்கு இரத்த ஓட்டத்தை பாதிக்கும் இதய பிரச்சனை இருந்தது.


இவ்விரு குழந்தைகளுக்கும் காவேரி மருத்துவமனையின் குழந்தை இதயவியல் மருத்துவக்குழு ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளது. இச்சிகிச்சைகளுக்கு தொடைப் பகுதியில் உள்ள இரத்த நாளங்கள் மூலம் சிறிய, துல்லியமான தோல் திறப்புகள் மட்டுமே தேவைப்படும்.


48 மணி நேரமே ஆன குழந்தையின் விஷயத்தில், இதயம் நுரையீரலுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் வால்வு வெகுவாக குறுகியிருந்தது (கிரிட்டிக்கல் பல்மோனரி வால்வு ஸ்டெனோசிஸ்). இதனால் குழந்தை போதுமான ஆக்சிஜனைப் பெற சிரமப்பட்டது. இக்குழந்தைக்கு பலூன் பல்மோனரி வால்வுலோபிளாஸ்டி எனப்படும் உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒரு சிறிய பலூன் தொடையில் உள்ள இரத்த குழாய் வழியாக செலுத்தப்பட்டு குழந்தையின் குறுகிய வால்வு விரிவாக்கப்பட்டது. குழந்தை நல்ல முறையில் குணமடைந்து, பிறந்த ஐந்தாவது நாளில் நல்ல ஆரோக்கியத்துடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.


பதினோரு நாட்களே ஆன மற்றொரு குழந்தை, தொடர்ச்சியான சுவாசக் பிரச்சனைகளால் அவதியுற்றது. மருந்துகள் கொடுத்தும் கூட செயற்கை சுவாசத்தின் துணை அதற்கு தேவைப்பட்டது. இதயத்தில் இருந்த ஒரு அசாதாரண இரத்த நாளமே அடிப்படை பிரச்சினை. பிறப்பிற்குப் பிறகு மூட வேண்டிய இந்த இரத்த நாளம் மூடத் தவறியது. இதற்கு பேடண்ட் டக்டஸ் ஆர்டிரியோசஸ் அல்லது பிடிஏ என்று பெயர். இதற்கு தீர்வாக திறப்பை அடைக்க பிக்கோலோ எனப்படும் 4x2 மிமீ அளவுள்ள ஒரு சிறிய சாதனத்தை பொருத்தப்பட்டது. குழந்தையின் சுவாசம் 48 மணி நேரத்திற்குள் சீராகி, விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. இத்தகைய சிகிச்சை திருச்சியில், ஏன் தெற்கு தமிழ்நாட்டிலேயே, முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


காவேரி மருத்துவமனையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவான மா காவேரி, மகப்பேறியல், பெண்ணோயியல் மற்றும் குழந்தைகள் மருத்துவம் ஆகியவற்றில் விரிவான மற்றும் சிறப்பு சேவைகளை வழங்குகிறது. காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டி, இருதயவியல் மற்றும் இருதய அறுவை சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த சிறப்பு மையமாகும். திருச்சியில் அமைந்துள்ள இந்த இரண்டு மருத்துவமனைகளும், 1,200 க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் இயங்கிவரும் புகழ்பெற்ற காவேரி மருத்துவமனை குழுமத்தைச் சேர்ந்தவை.


People on the Dias: Left to Right

   Mr.A.Madhavan, Senior General Manager & Regional Head, Kauvery Hospital, Trichy

 Dr.G.Pravin Kumar, Consultant Cardiac Anaesthesiologist, Kauvery Hospital Heartcity, Trichy

 Dr.S.Mani Ram Krishna, Consultant Paediatric Cardiologist, Kauvery Hospital Heartcity, Trichy

 Dr.T.Senthil Kumar, Executive Director & Unit Head, Kauvery hospital Heartcity, Trichy

 Dr.D.Senguttuvan,   Co-Founder & Executive Director, Kauvery Hospital, Trichy

 Dr.S.P Vinoth Kumar, Consultant Paediatric Cardiologist, Maa Kauvery Hospital, Trichy

 Dr.K.Senthil Kumar, Head & Senior Consultant – Neonatologist, Maa Kauvery Hospital, Trichy

Post a Comment

0 Comments